மனைவியை கழுத்தறுத்து... தானும் சாகும் தருவாயில் குறிப்பெழுதிய கணவர்!
மனைவியின் கழுத்தை அறுத்து கொன்று விட்ட கணவர் தானும் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கழுத்தறுத்த கணவன்
விருதுநகர், சிவகாசியை சேர்ந்தவர் அந்தோணி பிச்சை(65). இவரது மனைவி ஜெயலட்சுமி(60). இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் நெல்லையில் உவரியில் உள்ள அந்தோனியார் கோயிலுக்கு சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா பேருந்து பயணிகள் நிழல் கூடத்திற்கு சென்று நின்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது திடீரென அந்தோணி பிச்சை தான் வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ஜெயலட்சுமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மருமகள் கொடுமை?
பின்னர் தானும் கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்தபோது, ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்தோணிசாமி பேப்பர் பேனா வாங்கி
அதில் தனது பெயர் தனது மனைவி பெயர் சிவகாசி முனீஸ்வரன் காலனி என்று தங்களது ஊரின் பெயரையும் எழுதிக் கொடுத்திருக்கிறார். அதனையடுத்து, இறந்த மனைவியின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தோனியை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்த போலீஸாரின் விசாரணையில், மருமகள் கொடுமையால் இது நடந்திருக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.