கள்ளக் காதலன் கழுத்தை அறுத்து சூட்கேசில் அடைத்த பெண் : காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்
தன்னை ஏற்க மறுத்த கள்ளக் காதலனை கழுத்தை அறுத்து கொலை செய்து சூட்கேசில் அடைத்து எடுத்து வந்த பெண்ணின் செயல் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சூட்கேசில் பிணம்
உத்திர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் மிகப்பெரிய சூட்கேசினை இழுத்து வந்துள்ளார்.அப்போது அங்கு சோதனையில் இருந்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது அந்த பெண் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளார்.
Ghaziabad: Preeti Sharma kil*ed Firoz for refusing to marry her !
— Barkha Trehan ?? / बरखा त्रेहन (@barkhatrehan16) August 8, 2022
Cold blooded murder, she ki*led him, packed his dead body in the bag, got arrested when she was on the way to dispose off his body.#CrimeHasNoGender #MenToo pic.twitter.com/E7s5tCFqnu
மேலும், அந்த பெண்ணிடம் ரயிலில் பயணம் செய்வதற்கான பயண சீட்டும் இல்லை , இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த பெண் கொண்டு வந்த சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர்.அதில்ஆண் நபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக இருந்துள்ளார்.
கழுத்தை அறுத்து கொலை
உடனடியாக அப்பெண்ணை கைது செய்த காவல்துறையினர் என்ன நடந்தது என விசாரித்துள்ளனர். விசாரணையில் , அந்த பெண்ணின் பெயர் ப்ரீத்தி சர்மா என்பது தெரியவந்துள்ளது35வயதான ப்ரீத்தி கணவரை பிரிந்து வாழ்த்து வந்துள்ளார்.
அப்போது அவருக்கும் முகமது பிரோஸ் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. 22 வயதான முகமது ,ப்ரீத்தியுடன் திருமணம் செய்யாமல் வாழ்க்கை நடத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் ப்ரீத்தி தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் முகமது திருமணத்துக்கு மறுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதமாக ஏற்பட்டுள்ளது.
ரயிலில் வீச திட்டம்
அப்போது கோபமடைந்த ப்ரீத்தி கையில் இருந்த பிளேடால் முகமதுவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் 3 அடி நீளத்துக்கு பெரிய சூட்கேஸில் முகமது உடலை அடைத்து நள்ளிரவில் ரயில்நிலையத்துக்கு எடுத்து வந்துள்ள போதுதான் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார் ப்ரீத்தி.
ரயில் நிலையத்துக்கு ஏன் வந்தார் என்பதையும் போலீசார் விசாரணை கூறியுள்ள ப்ரீத்தி ஆண் நண்பரின் உடலை எதாவது ஒரு ரயிலில் போட்டுவிட்டு சென்றுவிடலாம் என நினைத்து உடலை சூட்கேஸில் எடுத்துக்கொண்டு வந்ததாக கூறியுள்ளார்.
தன்னுடன் குடும்பம் நடத்த மறுத்த ஆண் நண்பரை கழுத்தறுத்துக்கொன்று பெரிய சூட்கேஸில் வைத்து கொண்டு வந்த சம்பவம் காசியாபாத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.