16 வயது சிறுமியை கற்பழித்த 68 வயது முதியவர் - வீடியோவை பார்த்து ஷாக்கான மகன்!
டெல்லியில் ஒரு முதியவர் சிறுமியை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சனியை ஏற்படுத்தியுள்ளது.
மகன் சந்தேகம்
டெல்லியில் உள்ள புராரி என்ற பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர், இவருக்கும் இவரது 40 வயது மகனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் தந்தை தனக்கு சூனியம் வைத்ததாக நினைத்து அவர் தங்கும் அறையில் மகன் கேமரா பொறுத்தியுள்ளார்.
அதில் அவர் கண்ட காட்சியை பார்த்து அதிர்ந்து போனார். அந்த வீடியோவில் முதியவர் பக்கத்துவீட்டு 16 வயதான சிறுமியை கற்பழிப்பது தெரியவந்தது. உடனே இவர் அந்த சிறுமியின் தந்தைக்கு இந்த வீடியோவை அனுப்பிவைத்துள்ளார். அதனை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
கைது
இந்நிலையில், அந்த முதியவரின் மகன் போலீசிடம் புகாரளிக்க வேண்டாம் என்று மிரட்டியுள்ளார். ஆனால் அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசிடம் புகாரளித்தனர். தொடர்ந்து, போலீசார் அந்த முதியவரை கற்பழித்ததற்காக போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர், இவரது மகன் அந்த சிறுமியின் பெற்றோரை மிரட்டியதாக கைது செய்தனர்.
மேலும், விசாரணையில் அந்த முதியவர் பக்கத்துவீட்டினருடன் நெருங்கி பழகியதாகவும், அந்த சிறுமியை ஆசை வார்த்தையை பேசி இவாறு செய்ததாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.