ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் திடீர் டெல்லி பயணம் - செந்தில் பாலாஜி குறித்து ஆலோசனை?
ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக டெல்லி செல்கிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி
போக்குவரத்து துறையில் ஊழல் செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததது. அதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
அதனையடுத்து, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்ற முதலமைச்சரின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இருப்பினும், அமைச்சர் செந்தில் பாலாஜி இலாக இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது.
டெல்லி பயணம்
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக இன்று டெல்லி செல்லவுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும்
உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோருடன், தமிழ்நாட்டின்
நிலவரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.