85 வயது மனைவியை கொன்ற 90 வயது முதியவர் - நெஞ்சை உருக்கும் சோகம்
மனைவியை கணவர் கருணை கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதிய தம்பதி
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிவிளையைச் சேர்ந்த சந்திரபோஸ்(90) பனை ஏறும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி லெட்சுமி (85). இவர்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

சர்க்கரை நோயால் அவதிபட்டு வந்த லட்சுமி கடந்த சில மாதங்களாகவே படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார். வயதானாலும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வரை தானே உழைத்து மனைவியை சந்திரபோஸ் பராமரித்து வந்தார்.
வேதனையில் மனைவி
உடன் தங்கி இருந்து பராமரிக்காமல் விட்டாலும் மாதம் ஒரு மகன் வீதம் இவர்களுக்கு உணவு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. வயது முதிர்ச்சியின் காரணமாக சந்திரபோஸுக்கு கண் பார்வை மங்கி விட்டது. இதனால் மனைவியை சரிவர பராமரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மேலும் படுத்த படுக்கையாக இருந்ததால் இவரின் மனைவிக்கு முதுகுப்பகுதியில் புண்கள் ஏற்பட்டு வேதனையில் சத்தம் போட்டபடியே இருந்துள்ளார்.
மனைவி தன் கண்முன்பே கஷ்டபடுவதையும், அவருக்கு தன்னால் உதவிசெய்ய முடியவில்லையே என்ற ஆற்றாமையாலும் மிகவும் வேதனை அடைந்த சந்திரபோஸ் மனதை கல்லாக்கிக்கொண்டு ஒரு முடிவு எடுத்துள்ளார்.
கருணை கொலை
கையில் கத்தியை எடுத்துக்கொண்டு தடவிய படியே மனைவியின் கழுத்தை அடையாளம் கண்டு கண் கலங்கியபடியே மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். அதே கத்தியால் தானும் தற்கொலை செய்ய அழுதுகொண்டே வாசலில் அமர்ந்துள்ளார்.

அப்பொழுது அங்கு வந்த அவரது மகன் சாந்தகுமார் தன் தாய் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தகவலறிந்த காவல்துறை லெட்சுயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயத்துடன் காணப்பட்ட சந்திரபோஸை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். காயத்துடன் காணப்பட்ட சந்திரபோஸை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
எனக்கு வாழ்க்கை முழுவதும் உறுதுணையாக இருந்த மனைவி வேதனையால் துடித்துக்கொண்டு, சத்தம்போட்டுக்கொண்டே இருந்ததால் தாங்க முடியாத துயரம் அடைந்தேன். என்னால் மனைவியை சரிவர கவனிக்க முடியாத மனவருத்ததில் அவரின் கழுத்து அறுத்து கொலை செய்தேன்" என சந்திரபோஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். மனைவியை கவனிக்க முடியாத சோகத்தில் கருணை கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ள்ளது.