இணையத்தை மிரளவிட்ட தாத்தா; பிரபல நிறுவனங்களில் ரூ.100 கோடி ஷேர் - வீடியோ வைரல்!
கிராமத்து முதியவர் ஒருவர் ரூ. 100 கோடி பங்குகள் வைத்திருக்கும் தகவல் கவனம் ஈர்த்துள்ளது.
100 கோடி பங்குகள்
பிரபல வர்த்தக நிபுணரான ராஜிவ் மேத்தா தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், சொத்தை பெருக்குவதற்கு முதலீடு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதில், முதியவர் ஒருவர் மேலாடை இல்லாமல் டிரவுசர் மட்டுமே அணிந்து மிகவும் எளிமையாக காட்சியளிக்கிறார். இந்த முதியவருக்கு பிரபல நிறுவனமான எல் அண்டு டி- யில் ரூ. 80 கோடி மதிப்புள்ள பங்குகளும்,
வீடியோ வைரல்
சிமென்ட் நிறுவமான அல்ட்ரா டெக்கில் ரூ. 21 கோடி மதிப்புள்ள பங்குகளும் உள்ளன. கர்நாடக வங்கியில் இருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள பங்கு இவருக்கு உள்ளது. தனக்கு உள்ள சொத்து மதிப்பு,
As they say, in Investing you have to be lucky once
— Rajiv Mehta (@rajivmehta19) September 26, 2023
He is holding shares worth
₹80 crores L&T
₹21 crores worth of Ultrtech cement shares
₹1 crore worth of Karnataka bank shares.
Still leading a simple life#Investing
@connectgurmeet pic.twitter.com/AxP6OsM4Hq
முதலீடு செய்திருப்பது உள்ளிட்ட விபரங்களை துல்லியமாக வீடியோவில் தெரிவிக்கிறார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். முதியவர் குறித்த தனிப்பட்ட விபரங்கள் ஏதும் இந்த வீடியோவில் இடம்பெறவில்லை.