திடீர் வலிப்பு - கூழ் அண்டா மீது விழுந்த முதியவர்...நேர்ந்த விபரீதம்!

Tamil nadu Madurai Death
By Sumathi Jul 30, 2022 06:28 AM GMT
Report

பக்தர்களுக்கு வழங்க கூழ் காய்ச்சப்பட்ட அண்டாவில் முதியவர் ஒருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆடிமாத வெள்ளி

மதுரை, பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் ஆடிமாத வெள்ளியை முன்னிட்டு , பக்தர்களுக்கு வழங்க ஆறுக்கும் மேற்பட்ட அண்டாக்களில் கூழ் காய்ச்சப்பட்டது.

திடீர் வலிப்பு - கூழ் அண்டா மீது விழுந்த முதியவர்...நேர்ந்த விபரீதம்! | Old Man Died Falling On The Heated Receptacle

இப்பணியில், மேலத்தெரு பகுதியை சேர்ந்த முருகன் என்ற 54 வயது முதியவர் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. அதில் கொதித்துக் கொண்டிருந்த கூழ் பாத்திரத்தின் மீது விழுந்தார்.

முதியவர் உயிரிழப்பு

அதிக வெப்பத்துடன் கொதித்துக் கொண்டிருந்த கூழ் என்பதால் உடல் முழுவதும் கொட்டி அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுமார் 70% காயம் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முத்துக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.