13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 90 வயது முதியவர் செய்த கொடூரம்
13 வயது சிறுமிக்கு 90 வயது முதியவர் பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
90 வயது முதியவர்
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சிறுமிகள் கூட பாலியல் தொல்லைக்கு உள்ளாகி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 90 வயதான நாராயணசாமி என்ற முதியவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் , கண்ணுக்கு மருந்து போடும்படி கூறி அதே பகுதியில் 9ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
போக்சோவில் கைது
அப்போது நாராயணசாமி அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நாராயண சாமியை போக்சோ சட்டத்தின் கைது செய்தனர். சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.