மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பழைய பஸ் பாஸ் பயன்படுத்தலாமா?
Tamil nadu
Education
By Sumathi
பஸ் பாஸ் குறித்து போக்குவரத்து துறை விளக்கமளித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
தொடர்ந்து, புதிய மாணவர் சேர்க்கைக்கு பின், ஒட்டுமொத்தமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கப்படும்.
பஸ் பாஸ் தகவல்
அதுவரை மாணவர்கள் தங்களின் பள்ளி அடையாள அட்டை மற்றும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பஸ் பாஸை பயன்படுத்தி பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.
மாணவ, மாணவியருக்கு விரைந்து பஸ் பாஸ் வழங்க போக்குவரத்து கழக அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.