குறையாத வெயில்...மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகுமா?

Tamil nadu Anbil Mahesh Poyyamozhi
By Thahir Jun 04, 2023 08:23 AM GMT
Report

தமிழகம் முழுவதும் தற்போது புதிய கல்வி ஆண்டில் பள்ளிக் கூடங்கள் திறப்பிற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.

பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு 

இதற்காக மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜுன் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும். 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜுன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

குறையாத வெயில்...மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகுமா? | Will The Opening Date Of Schools Be Delayed

இந்த நிலையில் வெயில் வாட்டி வதைப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தது.

அந்த வகையில் ஜுன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

தள்ளிப்போக வாய்ப்பு 

கடந்த 1-ந்தேதிக்கு பதில் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் சமயத்தில் வெயில் குறைந்து விடும் என கணிக்கப்பட்டது. இப்போது வெயில் குறைவதற்கான அறிகுறியே தென்படவில்லை.

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை.

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. இயல்பாக பதிவாகும் வெப்ப அளவை விட கடந்த 4 நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகமாகவே காணப்படுகிறது.

இதனால் பள்ளிகள் 7-ந்தேதி திறப்பதை மறுபடியும் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு மீண்டும் கோரிக்கைகள் சென்ற வண்ணம் உள்ளது.

எனவே பள்ளிகள் திறப்பது மீண்டும் தள்ளி போகுமா? இல்லையா? என்பது குறித்த தகவல் ஒரிரு நாளில் வெளியாகும் என தெரிகிறது.