தவறாக கணித்துவிட்டேன்; அது கோலியின் முடிவு - ரோகித் சர்மா வேதனை
இந்திய அணி பேட்டிங் தேர்வு குறித்து ரோகித் சர்மா வேதனை தெரிவித்துள்ளார்.
IND vs NZ
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் 5 வீரர்கள் 0 ரன்கள், 4 வீரர்கள் ஓரிலக்க ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மாட் ஹென்றி இந்தியாவை 46 ரன்னுக்கு ஆல்அவுட் என்ற மோசமான ரன்னில் சுருட்டினார்.
இந்தியா 46 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், நியூசிலாந்து அணி 180/ 3 என்ற நிலையில் 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய 'ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டேன். 46 ரன்னுக்கு ஆல் அவுட்டான போது, கேப்டனாக வேதனை அடைந்தேன்.
ரோகித் சர்மா விளக்கம்
365 நாளில் சில நேரங்களில் இது போன்ற தவறான முடிவை எடுக்க நேரிடலாம். நேற்றைய நாள் மோசமானதாக அமைந்தது. ஆடுகளத்தில் புற்கள் இல்லை என நினைத்தோம். மந்தமான களத்தில் குல்தீப் விக்கெட் வீழ்த்துவார். இதனால் தான் ஆகாஷ் தீப்பை சேர்க்கவில்லை.
மூன்றாவது இடத்தில் களமிறங்குவது என்பது கோலியின் முடிவு. சர்பராஸ் கான் பொதுவாக நான்கு, ஐந்து அல்லது 6வது இடத்தில் வருவார். இதனால் 3வது இடத்தில் களமிறங்க முடியுமா என கோலியிடம் கேட்டோம். அனுபவ வீரர்கள் கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டும்.
இதன் அடிப்படையில் கோலியும் துணிச்சலாக களமிறங்கினார். இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.