பாபர் அசாம் நீக்கம்; கோலி சொதப்பிய போது ஆதரித்தது.. ஆனால், பாக்.வீரர் ஆதங்கம்!
பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டுள்ளார்.
பாபர் அசாம்
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தானை, இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.
இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டுள்ளார். மேலும், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா ஆகியோரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஃபகார் ஜமான் ஆதங்கம்
2022, டிசம்பருக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் பாபர் அசாம் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
இதுபற்றி பேசியுள்ள ஃபகார் ஜமான் “பாபர் அசாமை நீக்க சொல்லி விவாதிக்கப்படும் கருத்துகள் கவலையளிக்கின்றன. கோலி 2020 முதல் 2023 வரை மிகமோசமாக சராசரியாக 20 ரன்கள் வீதம் சேர்த்து ஆடிவந்தார்.
ஆனால் அவரை இந்திய அணி ஆதரித்தது. ஆனால் பாபர் ஆசாமை நீக்கினால் அது வீரர்களின் மனநிலையைப் பாதிக்கும். வீரர்களை இப்படி அச்சுறுத்தக் கூடாது” எனக் கூறியுள்ளார்.