நம்பர் 1 பவுலர்; ஆனால், ஓரமாக உட்கார வைத்த கம்பீர் - இந்திய அணியின் கதி!
உலகின் நம்பர் 1 டி20 பந்து வீச்சாளர் வெளியே அமர வைக்கப்பட்டுள்ளார்.
ரவி பிஷ்னோய்
இந்திய டி20 அணியில் ரவி பிஷ்னோய் இடம் பெற்றுள்ளார். தற்போது நடைபெற்று வரும் வங்கதேச டி20 தொடரில் இதுவரை எந்த போட்டியிலும் விளையாடவில்லை. அவர் மாற்று வீரராக வெளியே அமர வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, உலகின் நம்பர் 1 டி20 பந்து வீச்சாளராக டி20 தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தார். ரவி பிஷ்னோய் இதுவரை 32 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். டி20 போட்டியை பொறுத்தவரை இந்த எகானமியுடன்,
இந்திய அணியில் இடம்?
விக்கெட் வீழ்த்தும் சிறந்த பந்துவீச்சாளராகவே பார்க்கப்படுகிறார். இந்நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணியில் திடீரென வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டார். தற்போது வங்கதேச டி20 தொடரில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் பிளேயிங் லெவனில் சுழற் பந்துவீச்சாளர்களாக உள்ளனர்.
மூன்றாவது போட்டியில் ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றால் அவர்கள் இருவரில் ஒருவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும்.
ஆனால், கம்பீரின் ஆதரவு பெற்ற வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு அளிக்க வேண்டி ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.