தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Tamil nadu
By Jiyath May 24, 2024 08:11 AM GMT
Report

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறை

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், மக்களவைத் தேர்தல் காரணமாக மற்ற வகுப்புகளுக்கும் முன்கூட்டியே தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! | Official Announcement Tamilnadu Schools Reopening

இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. மேலும், மக்களவைத் தேர்தலால் கூடுதலாக கிடைத்துள்ள விடுமுறை நாட்களை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கழித்து வந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

10-ம் வகுப்பில் 99.5% தேர்ச்சி - நீதிமன்ற ஊழியருக்கு எழுத,படிக்க தெரியாததால் அதிர்ந்த நீதிபதி!

10-ம் வகுப்பில் 99.5% தேர்ச்சி - நீதிமன்ற ஊழியருக்கு எழுத,படிக்க தெரியாததால் அதிர்ந்த நீதிபதி!

பள்ளிகள் திறப்பு 

இதுதொடர்பாக பள்ளிக்கலவித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிவிப்பில் "2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! | Official Announcement Tamilnadu Schools Reopening

எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.