சென்னை கனமழையால் மின் தடையா? உதவி எண்களை அறிவித்த மின்சார வாரியம்

V. Senthil Balaji Power Cut Tamil nadu Chennai Minister of Energy and Power TN Weather
By Karthikraja Oct 15, 2024 08:30 AM GMT
Report

சென்னையில் மின்சாரம் தொடர்பான உதவிக்கு மண்டல வாரியாக மின்வாரிய அதிகாரிகளின் எண்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை கனமழை

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

chennai rains

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

கனமழை எதிரொலி; மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - அன்பில் மகேஸ் அதிரடி உத்தரவு

கனமழை எதிரொலி; மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - அன்பில் மகேஸ் அதிரடி உத்தரவு

மின்சார வாரியம்

இன்று(15.10.2024) காலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மின்தடை தொடர்பாக ஏதேனும் புகார்கள் அளிக்க சென்னையில் மண்டல வாரியாக உள்ள மின்வாரிய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருவொற்றியூர் - 94458 50889, மணலி - 94458 50871,  மாதவரம் - 94458 50344,  தண்டையார்பேட்டை - 94458 50900,   ராயபுரம் - 94458 50686, திரு.வி.க., நகர் - 94458 50909 அம்பத்தூர் - 94458 50311 

chennai electricity helpline

அண்ணாநகர் - 94458 50286 தேனாம்பேட்டை - 94458 50717, ஆலந்தூர் - 94458 50179, கோடம்பாக்கம் - 94458 50727 வளசரவாக்கம் - 94458 50202 அடையாறு - 94458 50555 பெருங்குடி - 95006 59827 சோழிங்கநல்லூர் - 94458 50164

மேற்கண்ட எண்களில் அந்தந்த பகுதி பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.