கனமழை எதிரொலி; மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - அன்பில் மகேஸ் அதிரடி உத்தரவு

Ministry of Education Tamil nadu Chennai TN Weather Anbil Mahesh Poyyamozhi
By Karthikraja Oct 15, 2024 06:10 AM GMT
Report

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கனமழை

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

chennai rains school leave

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை..பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா?

விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை..பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா?

இணைய வழி வகுப்புகள்

ஆனாலும் பல்வேறு தனியார் பள்ளிகள் இணைய வழி வகுப்புகள்(Online Class) நடத்துவதாக தகவல் வந்ததையடுத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அன்பில் மகேஷ்

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்".என தெரிவித்துள்ளார்.