விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை..பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா?

Tamil nadu Chennai TN Weather
By Swetha Oct 14, 2024 02:39 AM GMT
Report

சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

 கனமழை..

வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று உருவாக வாய்ப்பு உள்ளது. இது தொடர்ந்து வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுதினம் புதுச்சேரி, தமிழகத்தின் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் நிலவக்கூடும்.

விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை..பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? | Chennai Will Face Heavy Rain

அதன் காரணமாக அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது, விழுப்புரம், கடலூர்,

அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை,

இந்த தேதியில் ரெட் அலர்ட்; சென்னை வாசிகளே கவனம் - வானிலை மையம் வார்னிங்!

இந்த தேதியில் ரெட் அலர்ட்; சென்னை வாசிகளே கவனம் - வானிலை மையம் வார்னிங்!

விடுமுறையா?

கள்ளக்குறிச்சி, திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள்,

விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை..பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? | Chennai Will Face Heavy Rain

புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

 சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், சில நேரங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றார். சென்னையில் கனமழை பெய்த போதிலும், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையின் பல பகுதிகளில் நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கினாலும், வழக்கம்போல் பள்ளி-கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். அதேபோல், விழுப்புரம் மாவட்டத்திலும் இன்று பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.