லஞ்ச பணத்தை வாயில் போட்டு விழுங்கிய அதிகாரி - வாந்தி எடுக்கவைத்து பிடித்த போலீசார்!

India Madhya Pradesh Income Tax Department
By Vinothini Jul 26, 2023 05:30 AM GMT
Report

வருவாய்துறை அதிகாரி ஒருவர் தான் வாங்கிய லஞ்ச பணத்தை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம் பெற்ற அதிகாரி

மத்தியபிரதேச மாநிலம், பில்காரியில் உள்ள வருவாய்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர் பத்வாரி கஜேந்திர சிங். சந்தன்சிங் என்பவர் நில பிரச்சினை காரணமாக இவரை அணுகினார். அவரிடம் அதிகாரி ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தாங்கள் சொல்லும் வேலையை முடித்து கொடுப்பதாக கூறினார்.

officer-swallowed-corruption-money

ஆனால் அவர் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை, இதனால் இவர் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் அளித்தார். மேலும், அவரை ஆதாரத்துடன் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.

பணத்தை விழுங்கிய அதிகாரி

இந்நிலையில், சந்தன்சிங் சம்பவத்தன்று திட்டமிட்டபடி ரூ. 4.500 லஞ்சம் கொடுப்பது போல கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். போலீசை பார்த்ததும் அந்த அதிகாரி ஆதாரத்துடன் சிக்கிவிட கூடாது என்று அந்த பணத்தை வாயில் போட்டு மென்று விழுங்கினார்.

officer-swallowed-corruption-money

உடனே போலீசார் அவரை ஒரு தட்டில் வாந்தி எடுக்க வைத்தனர், அந்த பணம் கூலாக வெளியே வந்தது. பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் நன்றாக உள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.