கழிவு நீர் குழாயில் லட்சக்கணக்கான பணம் - சிக்கியது எப்படி?
அரசு அதிகாரி சாந்தப்ப கவுடா வீட்டின் போலி கழிவு நிர் குழாயில் மறைத்து வைத்திருந்த லட்சக்கணக்காண பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் கர்நாடக மாநிலத்தில் உள்ள 15 அரசு அலுவலர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பொதுப்பணித்துறையில் இணை இயக்குநராக பணியாற்றும் சாந்தப்ப கவுடா வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.அப்போது அவர் போலியாக அமைத்திருந்த கழிவு நீர் குழாயினை ஆய்வு செய்த போது அதில் கட்டு கட்டாக மறைத்து வைத்திருந்த 40 லட்சம் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரின் இல்லத்திலிருந்து 1 1/2 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.ஒரே நாளில் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரி ஒருவர் போலி கழிவு நீர் குழாயில் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மறைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.'