நண்பரின் 14 வயது மகளை கர்ப்பமாக்கிய அதிகாரி - மாத்திரை கொடுத்து கலைத்த மனைவி!
நண்பரின் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் துணை இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் துணை இயக்குநராக இருந்தவர் பிரமோதய் கக்கா. இவரது நண்பர் இறந்ததையடுத்து சிறுமியான அவரது மகள் குடும்பத்தினருடன் பிரமோதய் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், அந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து ஒரு வருடமாக கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். அவரின் கர்ப்பத்தைக் கலைக்க பிரமோதய் மனைவி சிறுமியிடம் மாத்திரைக் கொடுத்துள்ளார்.
அதிகாரி கைது
வற்புறுத்தி சிறுமியின் கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் மருத்துவர்களிடம் நடந்ததை கூறியுள்ளார்.

உடனே, இந்த விஷயம் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அதிகாரி பிரமோதய் கக்கா மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் துணை இயக்குந்ர பிரேமோதய் காக்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மேலும், சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க உதவிய அவரது மனைவியிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாழில் ஆலயம் செல்ல தனியாரின் காணிக்குள் பாதை அமைக்கும் இராணுவம் : காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு IBC Tamil
அதிகரிக்கும் பதற்றம் : ஈரானை நெருங்கியது அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் IBC Tamil