6 மாதங்களுக்கு முன் இறந்த அதிகாரிக்கு இடமாற்ற உத்தரவு - அதிர்ச்சியில் ஊழியர்கள்!
இறந்த அதிகாரியை இடமாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரி மரணம்
கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள திக்காவன் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகா பீமாராய புடபக் (54). இவர் சேடம் நகராட்சியில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இதனிடையே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அசோகா, கடந்த ஜனவரி மாதம் மரணமடைந்தார். இதனையடுத்து நடைபெற்ற இறுதிச் சடங்கில் அவருடன் பணியாற்றிய நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
இடமாற்றம்
இந்நிலையில் அசோகா பீமாராய புடபக் இறந்து 6 மாதங்களுக்கு பிறகு அவரை மடிக்கேரி நகராட்சிக்கு இடமாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் அவருடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், அதிகாரி இறந்து 6 மாதங்கள் ஆன நிலையில், அவருக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ள சம்பவம் நகராட்சி ஊழியர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.