போதை பொருளுக்கு அடிமையான பெண்..மூக்கில் ஓட்டை விழுந்த சம்பவம் - பகீர் பின்னணி!
கொக்கைன் போதை பொருளுக்கு அடிமையான பெண்ணுக்கு மூக்கின் மேல் பகுதியில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதை பொருள்
எந்த வகையான போதைப் பழக்கமும் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். போதை பழக்கம் ஆரோக்கியத்தை அழிப்பது மட்டுமல்லாமல், அது தன்னையும் குடும்பத்தையும் பாதிக்கும். ஒருவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால், அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம்.
அப்படி 38 வயதுடைய ஒரு பெண்ணுக்கும் இதேபோன்ற ஒன்று நடந்ததுள்ளது இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.அமெரிக்காவின் சிகாகோவில் வசித்து வருபவர் கெல்லி கோசிரா. இவருக்கு வயது38. இவர் 2017 ஆம் ஆண்டு, இரவு நேரத்தில் நண்பர்களுடன் விருந்துக்குச் சென்றுள்ளார்.
அப்போது அவரது நண்பர்களில் ஒருவர் முகர்ந்து பார்க்க அவருக்கு ஒரு கோகைன் கொடுத்துள்ளார். பின் சில மாதங்களுக்குள், கெல்லி கோசிரா போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளார். ஒருகட்டத்தில் உணவு, தூக்கம் இல்லாமல் 19 மாதங்களாக சுமார் ₹70 லட்சத்திற்கு அவர் போதைப்பொருட்களை வாங்கி பயன்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் அவரது மூக்கில் இரத்தம் வரத் தொடங்கியது.அதன் பிறகு சிறிது சிறிதாக மூக்கிலிருந்து இரத்தத்துடன் சதைத் துண்டுகளும் வெளியேறத் தொடங்கியபோது நிலைமை மோசமடைந்தது. இந்த காயம் தானாகவே குணமாகும் என்று கெல்லி கோசிரா அலட்சியமாக இருந்துள்ளார்.
மூக்கில் ஓட்டை
ஆனால் நாளுக்கு நாள் அவரது மூக்கின் மேல் பகுதியில் ஒரு துளை தோன்றத் தொடங்கியது. இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் போதைப் பொருளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதன் விளைவு தான் எனத் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவரின் முக்கில் 15க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, குணமடைந்து வருகிறார். மேலும் கெல்லி தனது அனுபவங்களை வீடியோவாக எடுத்து மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தவும், போதைப்பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கூறி கெல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.