சாக்கு மூட்டையில் கிடந்த நாய்.. கொல்கத்தாவில் அரங்கேறிய கொடூரம் - பகீர் பின்னணி!
ரயிலில் மூடியிருந்த சாக்கு மூட்டையில் நாய் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாக்கு மூட்டை
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் பராசத் பகுதியில் ரயில் நிலையம் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு ரயிலில் பயணம் செய்யப் பயணி ஒருவர் ஏறியுள்ளார்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக ஒரு சாக்கு பை இருந்துள்ளது.அப்போது சாக்கு மூட்டை அசைந்து, அதனுள் இருந்து விசித்திரமான சத்தம் கேட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நாய்
அதன்பிறகு அதைத் திறந்து பார்த்தபோது உள்ளே பயந்த நிலையில் நாய் ஒன்று மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருந்தது.இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.