ஹோட்டலில் இட்லி சாப்பிட்டா புற்றுநோய் வருமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
ஹோட்டலில் இட்லி சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக கர்நாடக அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இட்லி
தென் இந்தியாவில் காலை உணவுகளில் தோசை, இட்லி, போன்ற உணவுகள் பிரபலமானது.அந்த வகையில் சாலையோர கடைகள் மற்றும் ஓட்டல்களில் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை ஆய்வு ஒன்றை நடத்தியது.
இதற்காக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மாநிலம் முழுவதும் உள்ள 500க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் ஓட்டல்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பட்டது.
ஆய்வின் முடிவில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட உணவகங்களில் இட்லி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து சுகாதார அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
புற்றுநோய்
அப்போது பெரும்பாலான கடைகளில் இட்லி துணிக்குப் பதிலாக பிளாஸ்டிக் ஷீட் பயன்படுத்தப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இப்படிப் பயன்படுத்துவதால் பிளாஸ்டிக் ஷீட்டில் இருந்து டையாக்சின், மைக்ரோ பிளாஸ்டிக் (carcinogenic) என்ற ரசாயனம் வெளியேறுகிறது.இது இட்லியில் கலந்து விடுகிறது.
இந்த இட்லியைச் சாப்பிடும்போது, அது சிறிது சிறிதாகச் சேர்ந்து புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து ஆய்வக முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் அடுத்த கட்ட தகவல்கள் வெளிவரும் என அதிகாரிகள் கூறினர்.