திருமண ஊர்வலத்தில் காருக்கு பதிலாக புல்டோசர்..மணமகன் சொன்ன காரணம் -மிரண்டு போய்டுவீங்க!
திருமண ஊர்வலத்திற்குச் சொகுசு வாகனங்களுக்குப் பதிலாக மணமகன் புல்டோசரை தேர்வு செய்துள்ளார்.
திருமண ஊர்வலம்
பொதுவாக திருமண ஊர்வலத்திற்கு மக்கள் பாரம்பரியமாக கார்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இங்கு மணமகன் ஒருவர்புல்டோசரை தேர்வு செய்துள்ளார்.இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சியில் இளைஞர் ராகுல் யாதவ் என்பவருக்கு கரிஷ்மா என்ற பெண்ணிற்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது திருமண ஊர்வலத்தில் மணமகனின் காருக்கு பின்னால் டஜன் கணக்கிலான புல்டோசர்கள் அணிவகுத்து வந்துள்ளனர்.
புல்டோசர்
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து, அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இது குறித்து மணமகன் ராகுல் யாதவ் கூறுகையில்,’’ பொதுவாக திருமண ஊர்வலத்திற்கு மக்கள் பாரம்பரியமாக கார்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், நாங்கள் கொஞ்சம் வித்தியாசமாக புல்டோசர்களைப் பயன்படுத்தினோம். ஏனென்றால், கடவுளின் ஆசீர்வாதத்தால் நாங்கள் சில ஜேசிபிகளை வைத்திருக்கிறோம் என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.