நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து - மணல் சிற்பத்தில் அஞ்சலி செலுத்தும் இளைஞன்!

Odisha Train Accident
By Vinothini Jun 04, 2023 10:47 AM GMT
Report

ரயில் விபத்தில் பலியான பயணிகளுக்கு ஒரு இளைஞன் மணல் சிற்பம் அமைத்து அஞ்சலி செலுத்தி வருகிறார்.

விபத்து

கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது.

odisha-youngster-dedicates-sand-art-to-survivors

அதிவேகத்தில் சென்றபோது இந்த விபத்து ஏற்டபட்டதால் ரயில்கள் ஒன்றோடு ஒன்றாக மோதியதில் ரயில் பெட்டிகள் சிதறியது.

இதில் 290 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் படுகாயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து இந்திய மட்டுமின்றி பல நாட்டின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மணல் சிற்பம்

இந்நிலையில், பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் இந்த ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பூரி கடற்கரையில் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கிடப்பது போன்ற மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார்.

odisha-youngster-dedicates-sand-art-to-survivors

அந்த மணல் சிற்பம் முன்பு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மேலும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டி இந்த மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளதாக மணல் சிற்ப கலைஞர் தெரிவித்துள்ளார்.

இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

உயிர் பிழைத்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறி சிற்பத்தை அமைத்துள்ளார்.