துண்டிக்கப்பட்ட கைகால்கள், நொறுக்கப்பட்ட முகங்கள் - உயிர் பிழைத்தவர் பகீர் தகவல்

Odisha Train Accident
By Sumathi Jun 03, 2023 06:51 AM GMT
Report

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

 ரயில் விபத்து

ஒடிசா, பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்னை கோரமண்டல் ரயில் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி 280 பேர் பலியாகி உள்ளனர். 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

துண்டிக்கப்பட்ட கைகால்கள், நொறுக்கப்பட்ட முகங்கள் - உயிர் பிழைத்தவர் பகீர் தகவல் | Odisha Train Crash Recounts Horror Experience

இந்நிலையில் தடம் புரண்ட ரயில் பெட்டியில் இருந்து உயிருடன் தப்பிய பயணி ஒருவர் சம்பவம் குறித்து பேசியுள்ளார். "நான் ரிசர்வேஷன் செய்து பயணித்துக் கொண்டு இருந்தேன். நேற்று இரவு கண் அயர்ந்து நன்றாகத் தூங்கிக்கொண்டு இருந்தேன்.

பயங்கரம் 

ரயில்கள் மோதி பயங்கர சத்தம் கேட்டது. அந்த சத்தத்தில் கண்விழித்து பார்க்கும் போது நாங்கள் இருந்த பெட்டி தடம் புரண்டு கொண்டு இருந்தது. சூழலை உணரும் முன்னர் என் மீது 10-15 பேர் விழுந்துவிட்டனர்.

என் கைகள், கழுத்து மற்றும் தோள்களில் நிறைய வலி ஏற்பட்டது. அவர்களை மீறி நான் வெளியில் வந்து பார்க்கும் போது என்னைச் சுற்றி கை கால்கள் சிதைவுண்டு கிடந்த உடல்கள், துண்டிக்கப்பட்ட கைகால்கள், நொறுக்கப்பட்ட முகங்களுடன் உடல்கள் கிடந்தது என வேதனை தெரிவித்துள்ளார்.