அந்த அலறல் சத்தம்; நெஞ்சை பதறவைக்கும் ரயில் விபத்தின் கடைசி திக் திக் காட்சிகள்!

Odisha Train Accident
By Sumathi Jun 09, 2023 04:26 AM GMT
Report

ரயில் விபத்தின் கடைசி நிமிட காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரயில் விபத்து

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் 288 பேர் உயிரிழந்தனர். ரயில் விபத்திற்கு தொழில்நுட்ப கோளாறு காரணம் என்று கூறப்பட்டது.

அந்த அலறல் சத்தம்; நெஞ்சை பதறவைக்கும் ரயில் விபத்தின் கடைசி திக் திக் காட்சிகள்! | Odisha Train Accident Last Minute Video

மேலும், சதி செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில், விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், விபத்தின் போது ரயிலுக்குள் இருந்த பயணிகள் அலறிய அதிர்ச்சியூட்டும் கடைசி நிமிட காணொலி ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அதிர்ச்சி வீடியோ

தொடர்ந்து, விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சீரமைப்பு பணிகள் முடிந்து தனது வழக்கமான பயணத்தை கொல்கத்தாவின் ஷாலிமார்- சென்னை இடையே தொடங்கியது.

ரயில் அப்பகுதியில் கடக்கும் வழக்கமான 130 கி.மீ வேகத்திற்குப் பதிலாக, மிகவும் மெதுவான வேகத்தில் கடந்து சென்றது.