49 பெண்களுடன் காதல், 5 திருமணம் - காதல் மன்னனை பிடிக்க போலீசார் நடத்திய நாடகம்

Odisha
By Karthikraja Aug 04, 2024 11:53 AM GMT
Report

மேட்ரிமோனி இணையதளம் மூலம் 49 பெண்களை ஏமாற்றிய வாலிபர் சிக்கியுள்ளார்.

மேட்ரிமோனி

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யஜித் சமால்(34). திருமணத்திற்கு வரன் தேடும் வலைதளங்களில் விவகாரத்தான பெண்களை குறி வைத்து தனது காதல் வலையை விரித்துள்ளார். 

odisha 5 marriage 49 love

இதில் மயங்கும் பெண்களிடம் தாம் ஒரு போலீஸ் அதிகாரி என்று அறிமுகமாகி அவர்களை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவர்களிடம் பணத்தை பெற்றுள்ளார். ஒவ்வொரு பெண்ணிடமும் இதே போல் பழகி இதில் 5 பெண்களை ஒரே நேரத்தில் திருமணமும் செய்துள்ளார். 

இரவுகளில் மனைவியை பார்க்க வந்த பால்ய காதலன் - கணவர் செய்த வினோத செயல்

இரவுகளில் மனைவியை பார்க்க வந்த பால்ய காதலன் - கணவர் செய்த வினோத செயல்

விசாரணை

திருமணம் செய்து, பணத்தை பெற்றுவிட்டு அவர்களுடன் வாழ மறுத்ததாக கூறி 2 பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஒரே நபர் மீது இரு வேறு பெண்கள் புகார் அளித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

சமாலை கைது செய்ய திட்டமிட்ட காவல் துறையினர், பெண் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு மணமகன் தேவைப்படுவதாக மேட்ரிமோனி இணையதளத்தில் விளம்பரம் கொடுத்தனர். இதனைப் பார்த்த சலாம், அவரை திருமணம் செய்ய விருப்பம் இருப்பதாகக் கூறி அணுகியுள்ளார். அப்போது, அவரை போலீசார் கைது செய்தனர்.  

odisha playboy

அவரிடம் நடத்திய விசாரணையில் இதே போல் 49 பெண்களிடம் பழகியுள்ள்ளார். இதில் ஒரு பெண் அவர் பெயரில் வங்கியில் 8 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்று சமாலுக்கு காரை பரிசாக வழங்கி உள்ளார். மற்றோரு பெண் தொழில் தொடங்குவதற்காக 30 லட்சம் வரை வழங்கி உள்ளார். கைது செய்யப்பட்ட சமாலிடம் கார், இரு சக்கர வாகனம், 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றினர்.