கிரிக்கெட் விளையாடியதில் தலையில் தாக்கிய பந்து - சுருண்டு விழுந்த எம்.எல்.ஏ
Cricket
Odisha
By Sumathi
a year ago
கிரிக்கெட் விளையாடியதில் எம்.எல்.ஏ படுகாயமடைந்துள்ளார்.
பூபேந்தர் சிங்
ஒடிசா, நர்லா தொகுதி பிஜு ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. பூபேந்தர் சிங்(72). இவர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
அதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடரை தொடங்கி வைத்தார். அதன்பின், எம்.எல்.ஏ கிரிக்கெட் விளையாடினார். அப்போது அவர் பேட்டிங் செய்கையில் எதிர்பாராமல் பந்து அவரின் தலையை தாக்கியது.
படுகாயம்
அதில் காயமடைந்த அவர் மைதானத்திலேயே சுருண்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு உதவியாளர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.