தலையில் பட்ட பந்து... வலியால் விழுந்து துடித்த வெங்கடேஷ் அய்யர் - என்ன ஆச்சு?
வெங்கடேஷ் அய்யரின் பின் தலையில் பந்து பட்டதால் அவர் வலியால் துடித்த நிலையில் ரசிகர்கள் பதட்டம் அடைந்தனர்.
வெங்கடேஷ் அய்யர்
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கு மண்டலம் அணிகளும், மத்திய மண்டல அணிகளும் கோவையில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மத்திய மண்டல அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மண்டல அணி பேட்டிங்கில் தடுமாறியது.
தலையில் தாக்கிய பந்து
அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந் வெங்கடேஷ் அய்யர் 6 ரன்கள் எடுத்திருந்தபோது காஜா என்ற வீரர் பந்தை பீல்டிங் செய்யும்போது எறிந்தார். அது, வெங்கடேஷ் அய்யரின் பின் தலையில் பட்டது. இதனால் வலியால் துடித்தார்.
அதனையடுத்து, மைதானத்திற்குள் உடனடியாக ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டதால் அங்கிருந்த ரசிகர்கள் பதறினர். எனினும் வெங்கடேஷ் அய்யர், அவராகவே எழுந்து நடந்து மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து, உடனடியாக வெங்கடேஷ் அய்யர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்ததை அடுத்து அவர் மீண்டும் மைதானத்திற்கு வந்து பேட்டிங்கை தொடங்கினார். அவர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.