‘‘என் வழி தனி வழி’’: ரஜினி ரசிகரான ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர்
ஆர்சிபி அணிக்கு எதிராக அறிமுகமாகவீரராக களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வெங்கடேஷ் ராஜசேகரன் அய்யர் நேற்று தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 27 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அவுட்டாகமலிருந்தார்.
மைதானத்தில் பலரும் யார் இந்த வீரர் என்று ஆச்சரியப்படும் வேளையில் அவர் தன்னைப்பற்றி ஒரு போட்டியில் கூறும்போது, தான் ஒரு ரஜினிகாந்த் ரசிகன், வெறியன் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்லார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வெங்கடேஷ் அய்யர் ‘’நான் தலைவர் (ரஜினிகாந்த்) பக்தன், நான் அவரது படங்களை பலமுறை பார்ப்பேன், அவர் ஒரு லெஜண்ட்.” என்று கூறியுள்ளார், மேலும், அதே பேட்டியில், படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பஞ்ச் டயலாக் ‘என் வழி தனி வழி’ என்பது தனது பஞ்ச் டயலாக்கும்தான் என்கிறார் வெங்கடேஷ் அய்யர்.
மத்திய பிரதேச அணிக்கு டி20, 50 ஓவர் கிரிக்கெட்டில் அவர் ஏற்கெனவே கொடி நாட்டியுள்ளார். ம.பி. அணியின் யு-23 கேப்டனாகவும் இருந்துள்ளார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விஜய் ஹசாரே உள்நாட்டு ஒருநாள் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 149 பந்துகளில் 198 ரன்கள் விளாசி தெறிக்கவிட்டுள்ளார்.
இதில் 20 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் அடங்கும். இந்தத் தொடரில் 5 போட்டிகளில் 273 ரன்கள் விளாசினார் வெங்கடேஷ் அய்யர்.