ஆழ்கடலில் மர்ம இடம் - பெண் விஞ்ஞானி கையை பிடித்து வழிகாட்டிய ஆக்டோபஸ்!

Viral Video New York World
By Swetha Jun 03, 2024 09:30 AM GMT
Report

ஆழ்கடலில் பெண் விஞ்ஞானிக்கு ஆக்டோபஸ் வழிகாட்டிய சம்பவம் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பெண் விஞ்ஞானி 

அன்றாடம் இணையத்தில் நம்மை ஆச்சரியப்படுத்தும் விதமாக பல்வேறு விசயங்கள் பகிரப்பட்டு வருகிறது. நாம் அறியாத பல வினோத தகவல்களை பற்றி தெரிந்துகொள்ள முடிகிறது. அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாக்க காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆழ்கடலில் மர்ம இடம் - பெண் விஞ்ஞானி கையை பிடித்து வழிகாட்டிய ஆக்டோபஸ்! | Octopus Took Woman Scientist To Mysterious Place

எல்லோரும் அறிந்தபடியே ஆழ்கடலில் பல அதிசய உயிரினங்கள் வசித்து வருகின்றது. எனவே அது குறித்து அவற்றின் வாழ்க்கை முறைகள் மற்றும் வசிப்பிடங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானிகள் கடலுக்குள் செல்வதுண்டு. அப்படி ஒரு பெண் விஞ்ஞானி கடலின் ஆழத்தில் சென்றபோது, ஆக்டோபஸ் உயிரினம் அவரை சுற்றி,

சுற்றி வந்துள்ளது. ந்த ஆக்டோபஸ் இந்த பெண்ணின் கையை பிடித்து, இழுத்து ஒரு பகுதியை நோக்கி கடலுக்குள் முன்னேறியது. ஒரு கட்டத்தில் முன்னே சென்ற ஆக்டோபஸ், அந்த பெண் பின்னால் வருகிறாரா? என்பதற்காக சற்று நின்று திரும்பி கவனிக்கிறது. அவர் வருவது உறுதியானதும் மீண்டும் செல்கிறது.

கடலுக்கு அடியில் கிடைத்த "தங்க முட்டை"...ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்..!!

கடலுக்கு அடியில் கிடைத்த "தங்க முட்டை"...ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்..!!

வழிகாட்டிய ஆக்டோபஸ்

இறுதியாக, 2 உலோக கம்பிகளின் நடுவே தரையில் கல் பொருத்தப்பட்ட இடத்திற்கு சென்றது. அதன் பின்புறத்தில், ஒரு கல்லில் மையத்தில் ஆண் ஒருவர் கையில் நாய் குட்டியுடன் இருக்கும் படம் ஒன்று காட்சியளிக்கிறது. அந்த படத்தில் இருப்பவர் ஆழ்கடலில் ஆய்வு செய்ய சென்ற நபரின் நண்பருடைய தந்தை.

ஆழ்கடலில் மர்ம இடம் - பெண் விஞ்ஞானி கையை பிடித்து வழிகாட்டிய ஆக்டோபஸ்! | Octopus Took Woman Scientist To Mysterious Place

அதன் செயல் அந்த பெண்ணை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இது குறித்து பெண் விஞ்ஞானி பேசுகையில், உணர்ச்சி வசப்பட்ட தருணமது. இந்த புத்திசாலியான உயிரினம் என்னை அந்த பகுதிக்கு அழைத்து சென்றது. உங்களை போன்ற மனிதரை அது அடையாளம் கண்டு கொண்டதா?

என்பன போன்ற நிறைய கேள்விகள் எனக்குள் எழுந்தன. இதில் ஆச்சரியப்படக்கூடிய விசயம் என்னவென்றால், ஆக்டோபஸ் என்ன நினைக்கிறது என என்னால் யூகிக்கக்கூட முடியவில்லை என்று அவர் கூறுகிறார்.