ரிசர்வ் பெட்டியில் அன்ரிசர்வ் பயணிகள் டார்ச்சர் செய்றாங்களா? அப்போ இதை பண்ணுங்க..
ரயில் பெட்டியில் டிக்கட் இல்லாமல் பயணம் செய்வது குறித்து ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரிசர்வ் பெட்டி
இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் நீண்ட தூரம் பயணம் செய்ய இருக்கும் ஒரே வழி ரயில் வசதி தான். இப்படியாக ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்டு முன்பதிவு செய்யப்படாத பெட்டி என இரண்டு பிரிவுகளாக பெட்டிகள் உள்ளன.
இந்நிலையில் முன்பதிவு செய்யாத பல பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் ஏறி பயணம் செய்கிறார்கள். இதனால் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகப் பெரிய தொந்தரவாக இருக்கிறது.
ரயில்வே விளக்கம்
இது சமீப காலமாக பெரும் பிரச்சணையாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து நபர் ஒருவர் ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே துறை அமைச்சரை டேக் செய்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
Sleeper coach, reserved s5, 22829 which departed from Ahmedabad a while ago. Without ticket People not moving and giving place to us with reserved ticket. Please help. Pnr number - 8413099794 @RailwaySeva @RailMinIndia @AshwiniVaishnaw pic.twitter.com/NUhTvKIXWP
— Babu Bhaiya (@Shahrcasm) March 26, 2024
இந்த பதிவிற்கு ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதில், இது குறித்த புகார்களை செய்வதற்காக 139 என்ற எண்ணிற்கு டயல் செய்யலாம், அல்லது ரயில் மதாத் என்ற இணையதளத்தில் இது குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.