இஸ்ரேலின் இந்த மோசமான தாக்குதலால் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் - ஒபாமா எச்சரிக்கை!
பாரக் ஒபாமா இஸ்ரேலின் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போர்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய நாட்டிற்கு இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. ஹமாஸ் தாக்குதலால் பலர் உயிரிழந்தனர், மேலும், சிலரை பிணை கைதியாக வைத்துள்ளனர். இவர்களது தாக்குதலால் இஸ்ரேல் எதிர்தாக்குதலை நடத்தியது, இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 1,400 இஸ்ரேலியர்களும், 5,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், இதில் இஸ்ரேல், காஸா பகுதிக்குச் செல்லும், தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருள்கள், மருந்துகள் செல்வதைத் தடை செய்தது.
ஒபாமா எச்சரிக்கை
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, "2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து, இஸ்ரேல் - பாலஸ்தீனத் தலைவர்களுக்கு மத்தியில் நீண்ட காலமாக எந்தப் பேச்சுவார்த்தையையும் ஏற்படுத்த முயலவில்லை.
காஸாவில், இஸ்ரேல் அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட குடிமக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தைத் துண்டிக்கும் இஸ்ரேல் அரசின் முடிவு மனிதாபிமான நெருக்கடியை மோசமாக்குவது மட்டுமல்லாமல், பல தலைமுறைகளாகப் போராடும் பாலஸ்தீனிய மக்களின் மனப்பான்மையை மேலும் கடினப்படுத்தலாம்.
இதனால், இஸ்ரேல் வரும்காலங்களில் பெரும் பின்னடைவைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. இஸ்ரேலின் தற்போதைய செயல்பாடுகள் இஸ்ரேலுக்கான உலகளாவிய ஆதரவைக் குறைக்கும்.
இஸ்ரேலின் இதுபோன்ற நடவடிக்கைகள் தனது நாட்டில் அமைதியை நிலைநாட்ட நீண்டகாலமாக முயலும் முயற்சிகளை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. எல்லா வகையிலும் இஸ்ரேலுக்கு இது பின்னடைவாக முடியும்" என்று கூறி எச்சரித்துள்ளார்.