சசிகலாவுடன் கூட்டணி சேரும் ஓபிஎஸ்? மாநாட்டில் கலந்துக் கொள்ளாததற்கு காரணம் இதுதான்!
மாநாட்டில் ஓபிஎஸ், சசிகலாவிற்கு ஆதரவாக பேசியுள்ளது சில எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மாநாடு
திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில், தன்னை இரண்டு முறை முதலமைச்சர் ஆக்கியவர் ஜெயலலிதா என்றும்,
மூன்றாம் முறை முதலமைச்சராக்கியவர் சசிகலா என்றும் தெரிவித்தார். முன்னதாக, தேவைப்பட்டால் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உடன் இணைந்து செயல்படுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
கூட்டணி?
இந்நிலையில், இந்த மாநாட்டில் சசிகலா கலந்துக்கொள்ளவில்லை. அதற்கு இருவரும் ஒரு சமூகத்தினர் என்பதால் சாதி முத்திரை விழுந்துவிடுமோ என்று தவிர்த்ததற்கு வாய்ப்பிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இவர்களிடம் அதிமுக கட்சியும், சின்னமும் இல்லாதது மிகப்பெரிய தாக்கத்தை அரசியலில் ஏற்படுத்த வாய்ப்பில்லை என அரசியல் நிபுணர்களும், வல்லுனர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனால், ஓபிஎஸ் ஏற்கனவே கூறியதை போன்று டிடிவி தினகரன் மற்றும் சசிகலா உடன் கூட்டணி அமைக்க உள்ளாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உருவெடுத்துள்ளது.