வெளியேறிய ஆதரவாளர்கள் - தனித்து போகும் ஓபிஎஸ்....பாஜகவில் ஐக்கியமா?
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தற்போது அடுத்தடுத்த பின்னடைவுகளை சந்தித்து வருகின்றார்.
ஓபிஎஸ்
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, தொண்டர்கள் மீட்பு குழு, தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள் என பல இடங்களிலும் சென்று முறையிட்டார் ஓபிஎஸ். கட்சி இபிஎஸ் வசமே இருந்தது. ஆனால், ஓபிஎஸ் தொடர்ந்து அதிமுகவை மீட்டுட்பேன் என கூறி வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக ராமநாதபுரத்தில் களமிறங்கி மற்றுமொரு பின்னடைவை ஏற்படுத்தி கொண்டார்.
இந்த பின்னடைவில் இருந்து அவர் இன்னும் மீளாத நிலையில், அவருடன் இருந்த ஜேசிடி பிரபாகர் பெங்களூர் புகழேந்தி இருவரும் முன்னாள் எம்.பி. கேசி பழனிசாமியுடன் இணைத்து அதிமுக அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் குழு ஒன்றை துவங்கியுள்ளார்கள்.
பாஜகவில் இணைகிறேனா?
இந்த நிலையில் தான் தனித்து விடப்பட்டதான சூழலில் இருக்கும் ஓபிஎஸ், பாஜகவில் இணைவார் என்ற தகவல்கள் வெளிவர துவங்கின. அது தொடர்பாக, செய்தியாளர்களை ஓபிஎஸ் சந்தித்த போதும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சட்டென பதிலளித்த ஓபிஎஸ், என் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம். இப்படி சொன்ன பிறகும் நான் பாஜவில் இணையப் போவதாக யாராவது பேசுகிறார்கள் என்றால் அவர்கள் சுயநலத்துக்காக சொல்கிறார்கள் என கூறி சென்றார்.