Sunday, Jul 13, 2025

ஓ.பன்னீர் செல்வம் விரைந்து நலம் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

M K Stalin O. Panneerselvam
By Nandhini 3 years ago
Report

மருத்துவமனையில் அனுமதி

ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடந்த சில நாட்களாகவே உடல் சோர்வாக காணப்பட்டு வந்தார். இதனையடுத்து, அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடல் சோர்வு, காய்ச்சல் காரணமாக அவர் சென்னையில் அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு கொரோனா பாதிப்பு என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

நலம் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், #COVID19 தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான திரு. @OfficeOfOPS அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.   

m.k.stalin