திடீரென ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி? ஷாக்கான தொண்டர்கள்
ஓபிஎஸ் - ஈபிஎஸ்
அதிமுக தலைமை விவகாரத்தில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக மாறி மாறி அறிவித்துக்கொண்டு வருவது அதிமுக கட்சியினரிடையே குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டது. இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதால், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடந்த சில நாட்களாகவே உடல் சோர்வாக காணப்பட்டு வந்தார். இதனையடுத்து, அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடல் சோர்வு, காய்ச்சல் காரணமாக அவர் சென்னையில் அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு கொரோனா பாதிப்பு என்ற செய்திகள் வெளியான. இந்நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லை என்று மருத்துவமனையிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.
அரசியல் பேரங்களை அம்பலப்படுத்தியதால் சுட்டுக் கொல்லப்பட்ட சாட்சிகள்! நீர்கொழும்பு சிறையிலும் 20 துப்பாக்கிச் சூடு IBC Tamil
ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை IBC Tamil
அதிகரிக்கும் பலி - நாட்டை உலுக்கிய சிறைச்சாலை மோதல் - நீதி அமைச்சர் வைத்தியசாலைக்கு விஜயம் IBC Tamil