சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி? கடைசியா.. ஓபிஎஸ் நச் பதில்!

Vijay Tamil nadu AIADMK O. Panneerselvam
By Sumathi Jan 02, 2025 02:56 AM GMT
Report

விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.

 விஜய்யுடன் கூட்டணி?

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

o panneerselvam - vijay

என்னை அதிமுக கட்சியில் இருந்து விலக்கியது விதிமீறல். பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது கோர்ட்டு தீர்ப்பின் பின்பு தெரியவரும்.

ஒன்றிணையும் அதிமுக; 2026ல் அம்மாவின் ஆட்சிதான் - சபதமெடுத்த சசிகலா!

ஒன்றிணையும் அதிமுக; 2026ல் அம்மாவின் ஆட்சிதான் - சபதமெடுத்த சசிகலா!

ஓபிஎஸ் பதில்

அதிமுக கட்சி தொண்டர்களின் உரிமையை கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர் நிர்ணயம் செய்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த விவகாரத்தில் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ops

இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்கக்கூடாது. தடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறதா? என கேட்கையில், கடைசியாக கொக்கி போட பார்க்கிறீர்கள் எனத் தெரிவித்துவிட்டு சென்றார்.