யார் அந்த சார்? saveour daughters.. தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் - அதிர்ச்சி சம்பவம்!
அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் 'யார் அந்த சார்?' என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக
கடந்த 23ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் ஆண் நண்பரும் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மாணவியை பாலியல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரைக் கடந்த 25ஆம் தேதி காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவராக இருப்பதாகத் தகவல் வருகிறது.
போஸ்டர்
மேலும் இந்த வழக்குப் பதிவு செய்யபட்டபின் பெயர் இடம்பெற்ற பேனர்கள், நோட்டீஸ்கள் கிழிக்கப்பட்டுள்ளன.அதுமட்டுமில்லாமல் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக தலைவர்கள் பலருடன் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அதிமுகவினர் 'யார் அந்த சார்?' என போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அதில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் 'யார் அந்த சார்?' சேவ் அவர் டாட்டர் என்ற வாசகம் அடங்கியுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.