விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்; மண்ணைவிட்டு மறைந்தாலும்.. முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார்.
நினைவு நாள்
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு வந்து விஜயகாந்த்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் நினைவிடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முதல்வர் புகழாரம்
அந்த வகையில் விஜயகாந்த் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அமைச்சர் சேகர்பாபு முதல்வர் ஸ்டாலின் திமுக சார்பில் குரு பூஜையில் கலந்து கொள்ள முதல்வர் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் - கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.