திடீரென ஓபிஎஸ் வீட்டு வாசலில் வந்த குடுகுடுப்பைக்காரர்கள்.. - நெகிழ்ச்சியில் ஓ.பி.எஸ். - நடந்தது என்ன?
ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடும் பூதாகரமாகியுள்ளதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கட்சியை கைபற்றும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஓ.பி.எஸ் அணியினர் கடும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். கடந்து 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் கூட எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தும் ஓ.பி.எஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பியதால் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார்.
உயர்நீதிமன்றம் மறுப்பு
வரும் ஜூலை 11ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வரும் ஜூலை 11ல் நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
குடுகுடுப்பை காரர்கள்
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு வருகை தந்த குடுகுடுப்பை காரர்களை இனி அவருக்கு நல்ல காலம் தான் என்று ஓபிஎஸ்சை பார்த்து கூறியுள்ளனர். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு வந்த குடுகுடுப்பை காரர்கள் ஓபிஎஸ்க்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர், ஓபிஎஸ்க்கு இனி நல்ல காலம் பிறக்கப் போவதாக தெரிவித்தனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய குடியரசு துணைத் தலைவர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த இபிஎஸ் - ஓபிஎஸ்