டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம் - அதிமுக அரசியலில் பரபரப்பு
ஒற்றைத் தலைமை
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஓபிஎஸ் - இபிஎஸ் வந்தனர்.
ஓபிஎஸ் ஒழிக, துரோகி ஓபிஎஸ் கோஷம்
அப்போது, பொதுக்குழு அரங்கிற்கு ஓ.பி.எஸ். வந்த வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அவருக்கு எதிராக தொடர்ந்து கோஷமும், முழக்கமும் எழுப்பப்பட்டது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி ஆதாரவாளர்களால் ஓ.பி.எஸ். ஒழிக, துரோகி ஒழிக என்று கூச்சலிட்டு கோஷம் எழுப்பினர். அந்த நேரத்தில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தண்ணீர் பாட்டில் வீசி தாக்குதல்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களையம் நிராகரிப்பதாக எடப்பாடி தரப்பு அறிவித்ததால் ஓ.பி.எஸ். அதிர்ச்சி அடைந்தார். அப்போது, ஓ.பி.எஸ். மேடையிலிருந்து வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓ.பி.எஸ். வெளிநடப்பு செய்த போது அவர் மீது தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் ஏற்பட்டது.
டெல்லி பயணம்
இதனையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி., மனோஜ் பாண்டியன் உட்பட 5 பேர் நேற்று இரவு டெல்லி பயணம் செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பு தாக்கல் நாளை பாரதிய ஜனதா கட்சியில் நடைபெறுகிறது. அதற்காக டெல்லி செல்கிறேன் என்று கூறினார்.
பாஜக தலைவர்களை சந்திக்க வாய்ப்பு
தற்போது, டெல்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஒற்றை தலைமை குறித்து பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.