ஒற்றைத் தலைமை விவகாரம் - ஆதரவு குறைந்து வருவதால் ஓ.பன்னீர்செல்வம் கலக்கம் - மகிழ்ச்சியில் ஈ.பி.எஸ்

Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Nandhini Jun 21, 2022 08:35 AM GMT
Report

ஒற்றை தலைமை விவகாரம்

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வரும்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் எழுந்துள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக ஆலோசனை செய்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்களான எஸ்.பி வேலுமணி, தங்கமணி, ஆர்.பி உதயகுமார், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜூ, காமராஜ், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் பழனிசாமி இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.

8-வது நாளாக ஆலோசனை

அதிமுக ஒற்றைத் தலைமை குறித்த பூசல் வலுத்து வரும் நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் 8-வது நாளாக இன்றும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஒற்றைத் தலைமை விவகாரம் - ஆதரவு குறைந்து வருவதால் ஓ.பன்னீர்செல்வம் கலக்கம் - மகிழ்ச்சியில் ஈ.பி.எஸ் | O Panneerselvam Admk Tamilnadu Edappati

இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த 11 மாவட்ட செயலாளர்களில், 2 பேர் தற்போது பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். ஓபிஎஸ்-க்கு ஆதரவு அளித்து வந்த நெல்லை மாவட்ட செயாலளர் தச்சை கணேஷ ராஜா, மற்றும் விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன் ஆகியோர் தங்கள் ஆதரவை பழனிச்சாமிக்கு வழங்கியுள்ளனர்.

மா.பா.பாண்டியராஜன் ஆதரவு

மேலும், ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மா.பா.பாண்டியராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ஒற்றை தலைமையை தான் அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். தொண்டர்கள் விரும்புவது எடப்பாடி பழனிசாமி தலைமையை தான் என்று பேசினார். 

ஓ.பன்னீர்செல்வம் கலக்கம்

இதனால் ஓபிஎஸ்-க்கான ஆதரவு எண்ணிக்கை 9ஆக சரிந்திருக்கிறது. இதனால், மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார் பழனிச்சாமி. ஆதரவு எண்ணிக்கை சரிந்து வருவதால் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.