ஒற்றைத் தலைமை விவகாரம் - 8-வது நாளாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தனித்தனியே ஆலோசனை
ஒற்றை தலைமை விவகாரம்
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வரும்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் எழுந்துள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக ஆலோசனை செய்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்களான எஸ்.பி வேலுமணி, தங்கமணி, ஆர்.பி உதயகுமார், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜூ, காமராஜ், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் பழனிசாமி இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.
8-வது நாளாக ஆலோசனை
இந்நிலையில், அதிமுக ஒற்றைத் தலைமை குறித்த பூசல் வலுத்து வரும் நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் 8-வது நாளாக இன்றும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.