கையில் ட்ரிப்ஸ்..விடுதியில் மர்ம மரணம் - நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!
நர்சிங் மாணவி தங்கும் விடுதியில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம மரணம்
டெல்லியில் உள்ள நியூ அசோக் நகர் பகுதியில் ஒரு பெண்கள் தங்கும் விடுதி இயங்கி வருகிறது. அங்கு 22 வயது நர்சிங் மாணவி மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு அழைப்பு வந்தது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறையின்
உள்ளே பூட்டப்பட்டிருப்பதை கண்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது நர்சிங் மாணவி படுக்கையில் உயிரிழந்து கிடந்தார். அதன் பக்கத்திலிருந்து சீலிங் பேனில் 2 ட்ரிப்ஸ் பாக்கெட் தொங்கவிடப்பட்டு மாணவியின் கையில் ஊசி சொருகி ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு இருந்துள்ளது.
நர்சிங் மாணவி
இதனையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு இதை பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால், சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. தங்கும் விடுதியில் நர்சிங் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.