ஜலதோஷத்துக்கு ஆவி பிடித்த நர்சிங் மாணவி - துடிதுடிக்க இறந்த சோகம்!
ஆத்தூரில் நர்சிங் பயிலும் மாணவி ஜலதோஷத்துக்காக ஆவி பிடிக்க சென்று திடீரேன இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி
திருச்செந்தூர் மாவட்டம், ஆத்தூர் அருகே, மேலசேர்ந்த பூமங்கலம் என்னும் கிராமத்தை சேர்ந்த கவுசல்யா.
இவர் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவர் முற்றிய ஜலதோஷத்தால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.
அதானால் வெந்நீரில் மருந்து கலந்து ஆவி பிடித்தல் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று நினைத்து ஆவி பிடித்துள்ளார்.
மேலும், அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெந்நீர் வைத்து ஆவி பிடித்துள்ளார்.
பலியான சோகம்
இந்நிலையில், அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் பிடித்துக்கொண்டிருந்த வெந்நீருக்குள் மயங்கி விழுந்துள்ளார்.
இவர் அருகில் யாரும் இல்லாததால், சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக வெந்நீர் பானைக்குள் தலை மூழ்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அதன்பிறகு, அங்கு வந்த இவரது பெற்றோர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இவரது குடும்பம் சோகத்தில் ஆழ்ந்தது, இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.