ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்...!

By Nandhini Sep 09, 2022 10:41 AM GMT
Report

ஆத்தூரில் ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. 

இதனையடுத்து, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தகவல் அறிந்த பெற்றோர் பதறி அடித்துக் கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு ஓடி வந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Vomiting, fainting - students