தையல்களுக்குப் பதிலாக Feviquick..செவிலியர் செய்த செயல் - கடைசியில் சிறுவனுக்கு நேர்ந்த கதி!
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்ற சிறுவனுக்குக் காயத்துக்கு மருந்தாக பெவிகுயிக் போட்டு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் ஏழு வயது குருகிஷன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலை நேற்று விடுமுறை தினம் என்பதால் வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து கண்ணத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இதற்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஹனகல் தாலுகாவில் அடூர் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு பணியிலிருந்த செவிலியர் ஜோதி சிறுவனின் காயத்துக்கு மருந்தாக பெவிகுயிக் போட்டு அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து வீடு திரும்பிய சிறுவன் குருகிஷனிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர்.அப்போது சிறுவன் தனக்கு நடந்த சம்பவம் குறித்துக் கூறியுள்ளான் .இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் செவிலியரிடம் விசாரித்தனர்.
பெவிகுயிக்
அப்போது, குழந்தையின் முகத்தில் தையல்கள் நிரந்தரமாக வடுவை ஏற்படுத்தி விடும் என்பதால், இது நல்லது என்றும் கூறி, பெவிகுயிக் தடவினேன் எனச் செவிலியர் கூறியுள்ளார்.இதனையடுத்து இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து செவிலியர் ஜோதி பணியிடமாற்றம் செய்து ஹவேரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி உத்தரவிட்டார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுவன் குருகிஷனுக்கு உரியச் சிகிச்சை உட்படுத்தப்பட்டு குழந்தை நலமுடன் இருப்பதாகச் சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.